குறும்செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது..!

Worldwide the number of corona victims exceeds 23 million

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,75 கோடியை தாண்டியுள்ளது.

வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,08,38,995 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,75,38,170 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 31 ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,85,69,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,803 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

Worldwide the number of corona victims exceeds 23 million

Related posts

மாதவிடாய் பிரச்சினைகளும்.. நாப்கின்களும்..!

Tharshi

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொழும்பில் நூற்றுக்கு 100 வீதம் டெல்டா வைரஸ்..!

Tharshi

Leave a Comment