குறும்செய்திகள்

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ் 2022 இல்..!

Apples iPhone 14 Pro models to feature a punch hole design

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் விற்பனை இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் இல்லை என்றபோதும், புதிய ஐபோன்களின் நாட்ச் முந்தைய மாடல்களில் இருப்பதை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.

அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்துள்ளார்.

இந்த டிஸ்ப்ளே ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இத்துடன் 48 எம்பி வைடு ஆங்கில் கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அத்துடன், ஐபோன் 13 மினி ஐபோன் சீரிசில் கடைசி மினி மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும், அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5ஜி ஐபோன் எஸ்.இ. அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Apples iPhone 14 Pro models to feature a punch hole design

Related posts

எலும்புகள் பலவீனமடைவதற்கான முக்கிய காரணிகள்..!

Tharshi

26-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் செய்ய வேண்டிய அத்தியாவசியமான மருத்துவ பரிசோதனைகள்..!

Tharshi

10 comments

Leave a Comment