குறும்செய்திகள்

வாகன உதிரிப்பாகங்களாக மாறிய 16 கிலோ தங்கம்..!

16 kg of gold converted into auto parts

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) பெரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர்.

இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்..,

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் நகரத்திலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் தெரிவித்து 16 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது.

இப் பொருட்களின் உட்புற பாகங்கள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 kg of gold converted into auto parts

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரியின் தந்தை விடுதலை..!

Tharshi

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் சூர்யா-நயன்தாரா படங்கள்..!

Tharshi

திருகோணமலையில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் கைது..!

Tharshi

Leave a Comment