குறும்செய்திகள்

02-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

2nd Octber Today Raasi Palankal

இன்று அக்டோபர் 02.2021

பிலவ வருடம், புரட்டாசி 16, சனிக்கிழமை,
தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 8:51 வரை,
அதன்பின் துவாதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் நள்ளிரவு 2:19 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு, கரிநாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குழந்தைகளின் கல்வி விஷயத்திற்காக செலவுகள் சற்றுக்கூடும்.
பரணி: உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
கார்த்திகை 1: வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் தேவை.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மனதில் உற்சாகம் ஏற்படுத்தும் செயல் ஒன்று நடைபெறும்.
ரோகிணி: குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய நற்செய்தி ஒன்று உண்டு.
மிருகசீரிடம் 1,2: பண விஷயத்தில் கவனம் தேவை. நோய்கள் நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிரி ஒருவரால் இருந்த மறைமுக தொந்தரவு முடிவுக்கு வரும்.
திருவாதிரை: உறவினர்களிடம் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியம்.
புனர்பூசம் 1,2,3: முகத்தில் பொலிவு கூடும். வசீகரத்தன்மை அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கிக் கொடுக்காதீர்.
பூசம்: சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பணிகள் விரைந்து முடியும்.
ஆயில்யம்: நகை போன்றவற்றை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

சிம்மம் :

மகம்: பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். நிம்மதியான நாள்.
பூரம்: குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
உத்திரம் 1: மூன்றாவது நபர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

கன்னி:

உத்திரம் 2,3,4: இளம் வயதினருக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்
அஸ்தம்: செலவு அதிகமாக இருந்தாலும் வரவும் அதிகரித்து நிம்மதி தரும்.
சித்திரை 1,2: உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்:

சித்திரை 3,4: நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
சுவாதி: பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை.
விசாகம் 1,2,3: குடும்பச்சுமை குறையும். செலவு சற்றே அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பொருளாதார பிரச்சினை அகல நண்பர்கள் வழிகாட்டுவர்.
அனுஷம்: குடும்பத்தினருடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள்.
கேட்டை: விலை உயர்ந்த பொருளை வாங்குவீர்கள். கவரும் தன்மை அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: கற்பனை பிரச்னைகளை உருவாக்கி கொண்டு கவலைப்பட வேண்டாம்.
பூராடம்: மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள்.
உத்திராடம் 1: யாரிடமும் கடுமை காட்ட வேண்டாம். வாக்குவாதம் தவிருங்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்கள் நலம் விரும்புவோரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
திருவோணம்: புதிய வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான ஏற்பாடுகள் அமையும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உறவினர்கள் இடையே ஒற்றுமை பலப்படும். மகிழ்ச்சி கூடும்.
சதயம்: நண்பர்கள் சந்திப்பு திடீரென்று நிகழ்ந்து உற்சாகம் கூட்டும்.
பூரட்டாதி 1,2,3: குழப்பங்கள் அகலும். எதிர்பாலினத்தினரால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: வழக்கமாகச் செய்யும் பணியை இன்று மாற்றி அமைப்பீர்கள்.
உத்திரட்டாதி: எப்போதோ எதிர்பார்த்த லாபம் ஒன்று நிதானமாய் வரும்
ரேவதி: மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான சம்பவமொன்று நடைபெறும்.

2nd Octber Today Raasi Palankal

Related posts

அதிவேக நெடுஞ்சாலையின் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..!

Tharshi

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல்..!

Tharshi

மனைவியின் சொத்தை கணவன் சொந்தம் கொண்டாட முடியுமா..!

Tharshi

Leave a Comment