குறும்செய்திகள்

07-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

7th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 07.2021

பிலவ வருடம், புரட்டாசி 21, வியாழக்கிழமை,
வளர்பிறை, பிரதமை திதி மதியம் 3:49 வரை,
அதன்பின் துவிதியை திதி, சித்திரை நட்சத்திரம் நள்ளிரவு 12:08 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : சந்திர தரிசனம், குருவாயூரப்பன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தடுமாற்றங்கள் அகலும் நாள். சிறிய அளவில் தனவரவு உண்டு.
பரணி: முயற்சி ஒன்று கைகூடும். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.
கார்த்திகை 1: மேலதிகாரிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: சிறு பயணம் ஒன்று நல்ல பலனைத் தரும். மகிழ்வான நாள்.
ரோகிணி: காலை நேரத்தில் எதிலும் அதிக கவனம் தேவைப்படும் நாள்.
மிருகசீரிடம் 1,2: அருகில் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
திருவாதிரை: நேற்று முடிவடையாத நன்மை ஒன்று இன்று நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்:

புனர்பூசம் 4: உடல் ரீதியாக ஏற்பட்ட உபாதை தீர்ந்து நிம்மதி வரும்.
பூசம்: திடீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்து உற்சாகம் கூடுதலாகும்.
ஆயில்யம்: குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் :

மகம்: பணியிடத்தில் நிறைய மாறுதல் வரலாம். முயற்சியில் தாமதம் ஏற்படும்.
பூரம்: வியாபாரம் சூடுபிடிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும்.
உத்திரம் 1: எதிரிகள் பின்வாங்குவர். மனதின் தடுமாற்றங்கள் அகலும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் சந்தோஷ சம்பவம் ஏற்பட வாய்ப்புண்டு.
அஸ்தம்: சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். நம்பிக்கை துளிர்க்கும்.
சித்திரை 1,2: தொழில் அமோகமாக நடைபெறும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வீண் விரயங்களில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதி மீளும்.
சுவாதி: சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். மனதில் இருந்த பயம் நீங்கும்.
விசாகம் 1,2,3: துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். லாபம் வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பூமி விற்பனை, வாடகையில் லாபம் வரும். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: சொத்து சேர்க்கை பற்றி இப்போதைக்கு பரபரப்பு வேண்டாம்.
கேட்டை: சுபச்செலவுகள் செய்வீர்கள். அரசியல்வாதியால் அனுகூலம் உண்டு.

தனுசு:

மூலம்: மாணவர்களுக்கு நன்மை ஏற்படும். பேச்சினால் லாபம் வரும்.
பூராடம்: மனம் மகிழும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
உத்திராடம் 1: குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பொருளாதார நிலையில் எவ்வித தொய்வும் இருக்காது.
திருவோணம்: குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
அவிட்டம் 1,2: குழந்தைகள் நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மனதில் நினைத்ததை இன்று செய்து முடிப்பீர்கள்.
சதயம்: நீண்ட நாளாக கிடைக்காத நன்மை ஒன்று இப்போது வரலாம்.
பூரட்டாதி 1,2,3: மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பேச வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: அவசரப்போக்கால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
உத்திரட்டாதி: பணியாளர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
ரேவதி: பணியில் சுறுசுறுப்பை கூட்ட வேண்டியிருக்கும். உற்சாகமான நாள்.

7th October Today Raasi Palankal

Related posts

சீரக சம்பா மட்டன் பிரியாணி..!

Tharshi

விசித்திரமான முறையில் நாக்கினை இரண்டாக பிளந்த யாழ் இளைஞன்..!

Tharshi

நிவாரணத்திற்குப் பதில் உயரும் மின் கட்டணம் : சஜித் குற்றச்சாட்டு..!

Tharshi

Leave a Comment