குறும்செய்திகள்

15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி..!

Pfizer vaccine for students over 15 years of age

15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையானது, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை சுகாதார பிரிவை இந்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்த சுகாதார அமைச்சு எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தொடர்பிலான தரவுகளை பாடசாலை அதிபர்களின் ஊடாக கோரி, அதனூடாக மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிக குறுகிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி, நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதம் குறித்து, தமது சுகாதார அதிகாரிகளுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி செலுத்தும் போது இடம்பெறும் மோசடிகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே, தடுப்பூசிகளை பாடசாலைகளிலேயே செலுத்த திட்டமிட்டதாகவும் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.

Pfizer vaccine for students over 15 years of age

 

Related posts

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் : நடிகர் விஜய் மேல் முறையீடு..!

Tharshi

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் பூரண குணம்..!

Tharshi

யாழ். தனியார் விடுதியில் வாள் வெட்டு..!

Tharshi

Leave a Comment