குறும்செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் சீமெந்தின் விலை..!

The price of cement is rising again

உலக சந்தையில் சீமெந்து விலை அதிகரித்துள்ளமையினால், உள்நாட்டிலும் சீமெந்து விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ரத்து செய்திருந்த நிலையில், 50 KG சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதன்படி, 50 KG சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீமெந்து இறக்குமதிக்காக தற்போது ஒரு மூடைக்காக 1300 ரூபா வரை செலவிட நேர்ந்துள்ளமையினால், எதிர்வரும் தினங்களில் சீமெந்து விலையை அதிகரிக்க கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The price of cement is rising again

Related posts

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Tharshi

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..!

Tharshi

ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment