குறும்செய்திகள்

22-09-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

22nd September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 22,2022

சுபகிருது வருடம், புரட்டாசி 5, வியாழக்கிழமை 22.9.2022,
தேய்பிறை துவாதசி திதி, நள்ளிரவு 1:53 மணி வரை,
அதன்பின் திரயோதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் நள்ளிரவு 3:27 மணி வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி.
ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி.
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி.
குளிகை : காலை 9:00 – 10:30 மணி.
சூலம் : தெற்கு.

பரிகாரம் : நல்லெண்ணெய்.
சந்திராஷ்டமம் : உத்திராடம்.
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: அடுத்தவர் பிரச்னையில் தலையிடாதீர்கள். செயலில் கூடுதல் கவனம் தேவை.
பரணி: நீண்ட முயற்சிக்குப் பின் எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவுகள் உதவி புரிவர்.
கார்த்திகை1: உறவுகள் வழியே பிரச்னையை சந்தித்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.
ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.
மிருகசீரிடம் 1, 2: எதிரிகள் விலகிச் செல்வர். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பேச்சில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.
திருவாதிரை: மற்றவர் செயல்பாடு எரிச்சலை உண்டாக்கும். அமைதி காப்பது நல்லது.
புனர்பூசம்1, 2, 3: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: வேலைப்பளு அதிகரிக்கும். குழப்பம் ஏற்படும். செயலில் கவனம் தேவை.
பூசம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: செயலில் இருந்த தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்மம் :

மகம்: வீட்டில் உள்ள பழுதுகளை சரிசெய்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுங்கள்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சித்திரை 1, 2: நிதிநிலை உயரும். சொத்து வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3, 4: வியாபாரத்தில் தடைகளை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.
சுவாதி: வேலைக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். அந்நியர்களிடம் எச்சரிக்கை அவசியம்.
விசாகம் 1, 2, 3: தொழிலில் போட்டி அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தைவழி உறவால் நன்மை ஏற்படும்.
அனுஷம்: முன்னோர் அருளால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: வெளியூர் பயணத்தால் சங்கடம் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும்.
பூராடம்: எதிர்பார்ப்பில் சங்கடமான நிலை ஏற்படும். பண நெருக்கடியால் குழப்பம் தோன்றும்.
உத்திராடம் 1: கடன் தொல்லை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் கவனமுடன் செயல்படுங்கள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: எண்ணம் நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
திருவோணம்: வாழ்க்கைத் துணையால் முயற்சி வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: எதிரி தொல்லை மறையும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர்.
சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அந்நியரால் உதவி கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளால் கவலை ஏற்படும்.
உத்திரட்டாதி: அந்நியர் உதவியால் பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்வீர்கள்.
ரேவதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

22nd September Today Raasi Palankal

Related posts

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

2 கோடிக்கு மேல் சம்பளம் வேண்டும் : அடம் பிடிக்கும் அந்த நடிகை..!

Tharshi

சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க சில டிப்ஸ்..!

Tharshi

Leave a Comment