குறும்செய்திகள்

1000 கோடி சம்பளம் : பிக்பாஸ் 16 வது சீசன் குறித்து மனம் திறந்த சல்மான்கான்..!

Salman Khan opens up about BiggBoss season16

இந்தியில் ”பிக்பாஸ்” நிகழ்ச்சி 16 வது சீசன் ஆரம்பித்துள்ளது. இந்த சீசனையும் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ”பிக்பாஸ்” நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16 வது சீசன் ஆரம்பித்துள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முதல் ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான், பிக்பாஸ் 16 வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் இதுதொடர்பாக 16 வது சீசன் அறிமுக விழாவில் நடிகர் சல்மான்கான் விளக்கமளித்துள்ளார்.

அதில், “நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாமே. இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Salman Khan opens up about BiggBoss season16

Related posts

24-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

யாழ். நல்லூர் பகுதியில் விடுதி முற்றுகை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Tharshi

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை..!

Tharshi

1 comment

Leave a Comment