குறும்செய்திகள்

05-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 05,2023

சுபகிருது வருடம்,மார்கழி 21, வியாழக்கிழமை, 5.1.2023,
வளர்பிறை சதுர்த்தசி திதி நள்ளிரவு 2:56 மணி வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10:30 மணி வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி.
ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி.
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி.
குளிகை : காலை 9:00 – 10:30 மணி.
சூலம் : தெற்கு.

பரிகாரம் : நல்லெண்ணெய்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : தெட்சணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : புதிய முயற்சி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
பரணி : திட்டமிட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரி அடங்குவார்கள்.
கார்த்திகை 1 : வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : காலையில் குழப்பம் நீடித்தாலும் அதன்பின் உங்கள் முயற்சி பலிதமாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த வருமானம் மதியத்திற்கு மேல் வந்து சேரும். நிதிநிலை சீராகும்.
மிருகசீரிடம் 1, 2 : சங்கடங்களை எல்லாம் சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : காலையில் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அதனால் நன்மை உண்டு.
திருவாதிரை : செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : விழிப்புடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4 : காலையில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் செலவு அதிகரிக்கும்.
பூசம் : எதிர்பார்த்த தொகை ஒன்று கைக்கு வரும் என்றாலும் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சுறு சுறுப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எண்ணம் ஒன்று நிறைவேறும்.

சிம்மம் :

மகம் : தடைபட்டிருந்த வருமானம் வந்து சேரும். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள்.
பூரம் : தொழிலில் இருந்து வந்த சங்கடம் விலகும். நண்பர்களால் பணவரவும் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : திட்டமிட்டு செயலில் லாபம் காண்பீர்கள். அரசாங்க வழியில் நன்மை உண்டாகும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : உத்தியோகத்தில் இருப்பவர்களின் கோரிக்கை நிறைவேறும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
சித்திரை 1, 2 : புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு நன்மை தரும்.

துலாம்:

சித்திரை 3, 4 : இரண்டு நாட்களாக இருந்து வந்த நெருக்கடி விலகும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
விசாகம் 1, 2, 3 : தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். ஒரு முயற்சி இழுபறியாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4 : உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வரவு செலவில் இழுபறி உண்டாகும்.
அனுஷம் : காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்கள் செயல்களில் கவனம் தேவை.
கேட்டை : செயல்களில் முன்னேற்றம் உண்டானாலும் அதன்பின் சங்கடம் தோன்றி மறையும்.

தனுசு:

மூலம் : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்கு ஒன்று சாதகமாகும்.
பூராடம் : எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திராடம் 1 : நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை விலகும்.
திருவோணம் : உத்தியோகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். மறைமுக எதிரியை கண்டறிவீர்கள்.
அவிட்டம் 1, 2: அரசு வழியில் அனுகூலம் உண்டு. வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : நேற்றுவரை இருந்து வந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
சதயம் : பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : எதிர்பார்ப்பு நிறைவேறும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும்.

மீனம்:

பூரட்டாதி 4 : எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : அரசு வழியிலான முயற்சிகளில் கவனம் தேவை. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
ரேவதி: உத்தியோகத்தில் சக ஊழியரின் ஆதரவால் ஒரு பிரச்னையில் இருந்து வெளியில் வருவீர்கள்.

Related posts

05-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

07-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்..!

Tharshi

Leave a Comment