குறும்செய்திகள்

11-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 11,2023

சுபகிருது வருடம், மார்கழி 27, புதன் கிழமை, 11.1.2023,
தேய்பிறை சதுர்த்தி திதி மதியம் 12:51 மணி வரை,
அதன்பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:38 மணி வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : மதியம் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : தியாகராஜர் ஆராதனை.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். குடும்ப நலன் மேம்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாட்களாக தள்ளி வைத்து வந்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.
ரோகிணி: அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். செயல்களில் லாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: பகைவர்களின் தொல்லை விலகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும்.
திருவாதிரை: எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு.
புனர்பூசம் 1, 2, 3: தைரியமாக செயல்படுவீர்கள். விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

கடகம்:

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.
பூசம்: தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
ஆயில்யம்: புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம் :

மகம்: தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூரம்: ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் குழப்பம் தோன்றும்.
உத்திரம் 1: உங்கள் செயல்கள் இழுபறியாகும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். உங்களது எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
அஸ்தம்: யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள். நிதானம் காப்பது அவசியம்.
சித்திரை 1, 2: அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவுகள் செய்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: வராமல் இருந்த ஒரு தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு உண்டாகும். நன்மையான நாள்.

விருச்சிகம்:

விசாகம் 4: வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும்.
அனுஷம்: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கேட்டை: குடும்பத்தினர் விருப்பத்தைக் கேட்டு செயல்படுவீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.

தனுசு:

மூலம்: குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும்.
பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: செயலில் கவனம் தேவை. அமைதி காப்பது நன்மையாகும். முயற்சிகள் இழுபறியாகும்.
திருவோணம்: சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
அவிட்டம் 1, 2: வேலைகளில் குழப்பம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு சோர்வடைவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4: உங்கள் திறமை வெளிப்படும். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவார்கள். வருமானம் கூடும்.
சதயம்: உங்களைத் தேடி முக்கிய பொறுப்புகள் வரும். உங்கள் பலத்தை நீங்கள் அறிவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பநிலை உயரும். எதிர்ப்பு விலகும்.
உத்திரட்டாதி: விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.
ரேவதி: சொத்து சம்பந்தமான பிரச்னையில் சுமூகமான தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.

Related posts

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் அதிரடி கைது..!

Tharshi

மாதிவெல பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணக் கட்டுப்பாடு..!

Tharshi

டெல்டா வகை கொவிட் வைரஸ் : மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு..!

Tharshi

1 comment

Leave a Comment