குறும்செய்திகள்

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்..!

ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

எனினும், இந்த ஸ்மார்ட்போன் பற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் அதன் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரியல்மி GT நியோ 5 பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும தகவல்களின்படி ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலின் இரு ஆப்ஷன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.

இத்துடன் 6.74 இன்ச் OLED டிஸ்ப்ளே, 2722×1240 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 199 கிராம் எடை மற்றும் மூன்று கேமரா சென்சொர்களை கொண்டிருக்கிறது.

இவற்றில் 50MP பிரைமரி கேமரா, 8MP கேமரா மற்றும் 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது. இரு மாடல்களில் ஒற்றை வித்தியாசமாக சார்ஜிங் ரேட் மற்றும் பேட்டரி பேக் இருக்கின்றன.

ஒரு மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றொரு மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களிலும் ரியல்மி GT நியோ 5 இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.

சமீபத்திய TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனின் இரு வெர்ஷன்கள் RMX706 மற்றும் RMX3708 மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன.

Related posts

ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி..!

Tharshi

ஆயுர்வேத மருந்தால் கொரோனா குணமாகும் : அலை மோதும் மக்கள் கூட்டம்..!

Tharshi

31-12-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

8 comments

Leave a Comment