குறும்செய்திகள்

யாழில் ஒரு வாரத்தில் கரையொதுங்கிய ஆறு சடலங்கள்..!

Six dead bodies washed ashore in a week in Jaffna

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரையில், இன்று நண்பகல் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் – பூணைத் தொடுவாய் பகுதி கடற்கரையில் மேலும் ஒரு சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாக மேலும் நான்கு சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

நெடுந்தீவு, மணல்காடு, வல்வெட்டித்துறை ஆகிய பகுதி கடற்கரைகளில் குறித்த மூன்று சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

அந்தவகையில், கடந்த ஒரு வாரத்தில் கரையொதுங்கிய 6-வது சடலம் இதுவாகும்.

Six dead bodies washed ashore in a week in Jaffna

Related posts

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை மீறினால் தண்டனை : தலீபான்கள் புதிய அறிவிப்பு..!

Tharshi

கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்பான விபரம்..! (படம் இணைப்பு)

Tharshi

We Found the Sexiest Lingerie on the Internet

Tharshi

4 comments

Leave a Comment