குறும்செய்திகள்

காம்போ முறையில் சாதனங்களை அறிமுகம் செய்யும் ஹானர்..!

ஹெச் டெக் நிறுவனம் தனது ஹானர் X9b ஸ்மார்ட்போனுடன் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய சாதனங்கள் பிப்ரவரி 15-ம் திகதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய X சீரிஸ் அறிமுகத்தின் மூலம் ஹானர் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று தெரிவித்து இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மாடலில் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும். இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 30db வரை ANC, 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

இந்த இயர்பட்ஸ்-ஐ ஹானர் ஏ.ஐ. ஸ்பேஸ் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். இது ஹானர் சாதனங்களிடையே ஒருமித்த கனெக்டிவிட்டியை வழங்கும் என்றும் நம்பத்தகுந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஹானர் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் குறைந்த எடை மற்றும் லோ லேடன்சி வசதிகளை கொண்டிருக்கிறது.

ஹானர் சாய்ஸ் வாட்ச் 1.95 இன்ச் AMOLED மிக மெல்லிய டிஸ்ப்ளே, பில்ட்-இன் ஜி.பி.எஸ்., ஒற்றை க்ளிக் மூலம் SOS காலிங், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் ஹானர் ஹெல்த் ஆப் மூலம் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதில் 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

ஹானர் X9b போன்றே ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் உள்ளிட்டவை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Related posts

யாழ்.சாவகச்சேரியில் இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம்..!

Tharshi

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய விபத்து : பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு..!

Tharshi

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார் நாமல் ராஜபக்க்ஷ..!

Tharshi

8 comments

Leave a Comment