குறும்செய்திகள்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸுக்கு புற்றுநோய்..!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சார்ந்த பணிகள் ஒத்திவைக்கபடுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

75 வயதான மன்னர் சார்லஸ், கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் சார்ந்த பணிகளை விரைவில் மேற்கொள்வார் என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் மகாராணியாக கோலோச்சிய எலிசபெத் 2022 செப்டம்பரில் காலமானாா். இதையடுத்து, பிரிட்டன் அரச பாரம்பரியப்படி, மூத்த மகனான மூன்றாம் சாா்லஸ் அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை..!

Tharshi

10-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி..!

Tharshi

Leave a Comment