குறும்செய்திகள்

காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவை தான்..!

Coronavirus affect ear nose and throat

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கடரமணன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, டாக்டர் ஆர்.வெங்கடரமணன் கூறியதாவது…,

மூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது. மேலும் வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு (40 சதவீதம்) பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது.

தொண்டையில் புண் (11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம் (டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது. மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது.

இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.

இவ்வாறு டாக்டர் ஆர்.வெங்கடரமணன் கூறினார்.

Coronavirus affect ear nose and throat

Related posts

கிரிக்கெட் மைதானத்தில் வைத்து வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

Tharshi

ஒரு கோடி ரூபாய் ஆஃபர் : பிரபல நடிகையை அணுகிய பிக்பாஸ் 4 டீம்..!

Tharshi

39 மணிநேர பிளேபேக் வழங்கும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம்..!

Tharshi

Leave a Comment