குறும்செய்திகள்

பெரிய பவர் பேங்க் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்ய உருவாகி இருக்கும் யுஎஸ்பி சி 2.1..!

USB C received a powerful upgrade

யுஎஸ்பி சி பெற்று இருக்கும் புது அப்கிரேடு மூலம் சாதனங்களை விரைவில் 240W வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும்.

யுஎஸ்பி டைப் சி போர்ட் முந்தைய தலைமுறை வெர்ஷனில் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளை சரி செய்தது. மேலும் பல்வேறு புது வசதிகளை வழங்கியது. யுஎஸ்பி சி கொண்டு அதிகபட்சம் 100W திறனில் சாதனங்களை சார்ஜ் செய்ய முடிகிறது.

தற்போது யுஎஸ்பி சி கனெக்டர் புது வெர்ஷன் அதிகபட்ச சார்ஜிங் திறனை 100W-இல் இருந்து 240W ஆக அதிகரித்து இருக்கிறது. புதிய 240W சார்ஜிங் திறன் EPR அதாவது Extended Power Range என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு அதிக திறன் தேவைப்படும் பல்வேறு பெரிய சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.

யுஎஸ்பி சி 2.1 வெர்ஷன் சார்ஜிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் 240W திறன் கொண்ட கேபில்களில், இதனை தெரிவிக்கும் பிரத்யேக ஐகான் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதை கொண்டு கேமிங் லேப்டாப்கள், 4K மாணிட்டர்கள், லேசர் ப்ரின்டர், பெரிய பவர் பேங்க் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்யலாம்.

USB C received a powerful upgrade

Related posts

ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்..!

Tharshi

“தந்தையும் சகோதரனும் திரும்பி வர வேண்டும்” : இளவரசர் ஹரி குற்றச்சாட்டு..!

Tharshi

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தப்பிக்க முயற்சித்ததில் பரிதாபமாக பலியான நபர்..!

Tharshi

Leave a Comment