குறும்செய்திகள்

ரஷ்யாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்..!

Coronavirus positive case near 50 lakhs in Russia

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 16.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 34.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6 வது இடத்தில் உள்ளது.

அந்தவகையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,92,554 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு 386 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து 46.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 2.63 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus positive case near 50 lakhs in Russia

Related posts

தங்க விலையில் சரிவு..!

Tharshi

பெரிய திரைக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்யும் சின்னத்திரை நடிகை..!

Tharshi

நாளை முதல் இலங்கைக்கு 7 நேரடி விமான சேவை ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment