குறும்செய்திகள்

24-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

24th May Today Raasi Palankal

இன்று மே 24.2021

பிலவ வருடம், வைகாசி 10, 24.5.2021
திங்கட்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 10:21 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, சித்திரை நட்சத்திரம் காலை 7:25 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த – அமிர்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : பிரதோஷம், முகூர்த்தநாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பரவசப்படுத்தும் சம்பவங்கள் நிகழும். அனுபவம் கைகொடுக்கும்.
பரணி: ஆரோக்யம் பற்றிய பயம் நீங்கும். ஆடம்பரமான செயல் நிகழும்
கார்த்திகை 1: பிரச்னைகள் நல்ல முடிவிற்கு வரும். சிக்கனம் தேவை.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: தடைகள் ஏற்பட்டு விலகும். உறவினரிடம் கடுமை வேண்டாம்.
ரோகிணி: நீங்கள் தெளிவாக இருந்தாலும், மற்றவர்கள் குழப்புவார்கள்.
மிருகசீரிடம் 1,2: சுவாரஸ்யமான நாள். புதிய வேலை பற்றி நற்செய்தி வரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சி பற்றி ஆர்வம் ஏற்படும். கவலை தீரும்.
திருவாதிரை: சந்தோஷ சம்பவம் நடக்கும். சிறு வருத்தம் தோன்றி மறையும்.
புனர்பூசம் 1,2,3: பல நாட்கள் செய்து கொண்டிருந்த முயற்சி இன்று வெற்றிபெறும்.

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றம் உண்டு. வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.
பூசம்: பணியாளர்களின் எண்ணம் இன்று செயல்வடிவம் பெறும்.
ஆயில்யம்: பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். உங்களின் புகழ் கூடும்.

சிம்மம் :

மகம்: நினைத்து மகிழக்கூடிய நாள். தடைகள் தீரும். மற்றவருக்கு உதவுவீர்கள்.
பூரம்: பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னை அகலும். உணவில் அக்கறை வேண்டும்.
உத்திரம் 1: பணியிடத்தில் பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: உங்கள் மீது இருந்த புகார் தீரும். புதிய பொருள் வாங்குவீர்கள்.
அஸ்தம்: சமீபத்தில் முயன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
சித்திரை 1,2: சமீபத்திய செலவுகளால் ஏற்பட்டிருந்த மன உளைச்சல் நீங்கும்.

துலாம்:

சித்திரை 3,4: புதியதொரு துறையில் ஈடுபாடு வரும். சந்தோஷம் கூடும்.
சுவாதி: நிம்மதியான நாள். நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விசாகம் 1,2,3: உறவினர்களுக்கான முயற்சிகள் நல்ல முறையில் முடியும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கவலைகள் தீர்ந்து வாழ்வில் பிடிப்பும், நம்பிக்கையும் வரும்.
அனுஷம்: எடுக்கும் முயற்சிகளை யோசித்துச் செயல்படுத்துவது நல்லது.
கேட்டை: பிள்ளைகள் நலனில் பெண்கள் மிகுந்த அக்கறை கொள்வர்.

தனுசு:

மூலம்: நண்பர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.
பூராடம்: கடன் பற்றிய முயற்சிகள் பலனளிப்பதில் காலதாமதமாகக்கூடும்.
உத்திராடம் 1: குதுாகலமான நாள். விருப்பம் ஒன்று நிறைவேறும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எதையும் பொறுமையுடன் யோசித்துச் செய்யுங்கள்.
திருவோணம்: சந்தோஷத் திருப்பங்கள் வந்து சேரும். பேச்சில் பணிவு வரும்.
அவிட்டம் 1,2: கவனக்குறைவால் பொருட்களைத் தேட வேண்டியிருக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பழி தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
சதயம்: பிள்ளைகளின் வாழ்வில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும்.
பூரட்டாதி 1,2,3: சாதகமான நாள். சுபச்செலவு ஏற்படுவதற்கான அறிகுறி தெரியும்.

மீனம்:

பூரட்டாதி 4: பிள்ளைகளால் பெருமை சேரும். பதவி உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி: கொடுத்த பணம் திரும்ப வரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி: யாருடைய கோபத்தையும் துாண்ட வேண்டாம். நண்பரால் நன்மை வரும்.

24th May Today Raasi Palankal

Related posts

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தலில்..!

Tharshi

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் கோரும் இலங்கை..!

Tharshi

கணவரை விட்டு பிரிந்த காரணத்தை பிக்பாஸிடம் போட்டுடைத்த ரச்சிதா..!

Tharshi

Leave a Comment