குறும்செய்திகள்

26-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

26th May Today Raasi Palankal

இன்று மே 26.2021

பிலவ வருடம், வைகாசி 12, 26.5.2021
புதன்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி மாலை 5:30 வரை,
அதன்பின் பிரதமை திதி, அனுஷம் நட்சத்திரம் நள்ளிரவு 2:35 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : காஞ்சி மகாபெரியவர் பிறந்தநாள், புத்த பூர்ணிமா, சந்திர கிரகணம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சமீபத்தில் வருத்தம் தந்துகொண்டிருந்த கவலைகள் தீரும் நாள்.
பரணி: பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை தேவை.
கார்த்திகை 1: நிதி விவகாரங்களில் முன்பைவிட அதிகக் கவனம் தேவை.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த விஷயத்துக்காகக் காத்திருக்க வேண்டிவரும்.
ரோகிணி: மன அமைதிக்கான முயற்சிகள் செய்து பலன் அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: யாரிடமும் குரல் உயர்த்தி வாதிட வேண்டாம். கவலை தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சுபச்செய்தி வரும். தன வரவு உண்டு. புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
திருவாதிரை: உங்களைப் பற்றிப் பெருமையடையும் செய்தி வரும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் எதிர்பார்த்த நன்மைக்காகச் சற்று காத்திருங்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: இனிய சம்பவங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.
பூசம்: பெண்களின் திட்டங்கள் நிறைவேறும். புதிய விஷயத்தில் ஆர்வம் வரும்.
ஆயில்யம்: இன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நன்மை காண்பீர்கள்.

சிம்மம் :

மகம்: எதிர்பார்க்காத நன்மைகள் வரும். செயல்களின் வெற்றி கிடைக்கும்.
பூரம்: சகிப்பு தன்மை சற்றுத்தேவை. இளைஞர்களுக்கு வெற்றி எளிதாகும்.
உத்திரம் 1: இன்று உங்களுக்கு நல்லது நடக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணியாளர்களின் புது முயற்சியை மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
அஸ்தம்: குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இன்று முடிவுக்கு வரும்.
சித்திரை 1,2: சாதகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்ப்புகள் அடங்கும்.

துலாம்:

சித்திரை 3,4: பணியாளர் எதிர்பார்த்த பாராட்டுக் கிடைக்கும். குதுாகலமான நாள்.
சுவாதி: பெண்களின் தேவைகள் நிறைவடையும். இழந்த நிம்மதி மீளும்.
விசாகம் 1,2,3: நிதிவிவகாரங்களில் இருந்த அதிருப்தியான நிலை மாறும்.

விருச்சிகம்:

விசாகம் 4: நிதி விஷயத்தில் தேக்க நிலை தீரும். பேச்சு வார்த்தை நிறைவேறும்
அனுஷம்: புதிய முன்னேற்றம் வரும். சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கேட்டை: குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: பயம் தீரும். எதிர்பாலினத்தினரால் இருந்து வந்த டென்ஷன் தீரும்.
பூராடம்: குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை சாதகமான பலன் தரும்.
உத்திராடம் 1: பகை மாறும். நிதி திருப்தி தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பல காலமாக இருந்து வந்த பயம் ஒன்று நீங்கும்.
திருவோணம்: வங்கிக் கணக்கில் தொகை உயர்ந்து மகிழ்ச்சி தரும்.
அவிட்டம் 1,2: கடுமையான முயற்சியால் எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: விசா தொடர்பான பிரச்னைகளில் நல்ல தகவல் கிடைக்கும்.
சதயம்: அதிக நேரவிரயம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
பூரட்டாதி 1,2,3: பழைய கசப்பான விஷயங்களை மறப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: மன உறுதியுடன் செயல்படுவீர்கள். செலவுகள் குறையும்.
உத்திரட்டாதி: புதிய முயற்சிகளைத் தொடங்குவதை சற்றுத் தள்ளிப்போடலாம்.
ரேவதி: நிம்மதி கூடும். சண்டையிட்டவர் மாறுவர். காதல் விஷயத்தில் கவனம் தேவை.

26th May Today Raasi Palankal

Related posts

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..!

Tharshi

Health star ratings Kellogg reveals the cereal

Tharshi

Leave a Comment