குறும்செய்திகள்

சூப்பரான முட்டை காளான் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாமா..?

Egg Mushroom Kulambu Recipe in Tamil

காளானுடன் முட்டை சேர்த்து செய்யும் இந்த குழம்பை தோசை, இட்லி, நாண், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

இன்று இந்த சூப்பரான முட்டை காளான் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள் :

காளான் – கால் கிலோ
முட்டை – 6
பெ.வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவைக்கு
துருவிய தேங்காய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

* காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறு தீயில் வாணலியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறி விடவும்.

* பின்னர் அதனுடன் காளான்களை போட்டு வதக்கவும்.

* அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறி விடவும்.

* பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.

* அதனுடன் தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டையை உதிரியாக்கி போட்டு கிளறி விடவும்.

* மசாலா வாசம் நீங்கி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

Egg Mushroom Kulambu Recipe in Tamil

Related posts

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi

“கடவுளின் கை” : விண்வெளியில் தோன்றிய ஒளி மூட்டம்..!

Tharshi

சீரற்ற காலநிலை : மரணித்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!

Tharshi

Leave a Comment