குறும்செய்திகள்

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்..!

Husband video capture of wife suicide in Andhra

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைத் தடுக்காமல், மனிதாபிமானமின்றி கணவர் வீடியோ எடுத்த சம்பவம், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூரை சேர்ந்தவர் பென்சிலைய்யா (வயது 38). இவரது மனைவி கொண்டம்மா (36). பென்சிலைய்யா ஆத்மகூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பென்சிலைய்யா அடிக்கடி கொண்டம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கொண்டம்மா கணவன் கண்முன்னே வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

அவரை தடுக்க வேண்டிய கணவன் பென்சிலைய்யா, “நான் தடுக்க மாட்டேன் நீ தூக்கு மாட்டி கொள்” என கூறி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தூக்கு மாட்டிக்கொண்ட மனைவி துடிதுடித்து இறப்பது வரை செல்போனில் பதிவு செய்தார்.

கொண்டம்மா தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொண்டம்மா தூக்கு மாட்டிக்கொண்டபோது பென்சிலைய்யா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து செல்போனில் படம் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தற்கொலைக்கு தூண்டியதாக பென்சிலைய்யா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தடுக்காமல் மனிதாபிமானம் இன்றி கணவர் வீடியோ எடுத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband video capture of wife suicide in Andhra

Related posts

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

26-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சுகயீனம் இருந்தால் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க கோரிக்கை..!

Tharshi

Leave a Comment