குறும்செய்திகள்

யாழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு..!

Woman dies while praying in Jaffna

யாழ்ப்பாணம் கோவளம் பகுதியில், செபம் கூறிக் கொண்டிருந்தவேளை திடீரென மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வடமராட்சி – அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடி யைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் நேற்று பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது உயிரிழந்தவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Woman dies while praying in Jaffna

Related posts

சின்ன வெங்காய கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி..!

Tharshi

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..!

Tharshi

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது..!

Tharshi

Leave a Comment