குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 22 பேர் பலி..!

398 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 538,718 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (27) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் மாத்திரமே நேற்றைய தினம் (26) உயிரிழந்துள்ளதாகவும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 15 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 3 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

398 people in the country are confirmed infected today

Related posts

காதல் தகராறு : பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை..!

Tharshi

உலகிலேயே அதிக திருமணம் செய்த 94 குழந்தைகளின் தந்தை மரணம்..!

Tharshi

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி..!

Tharshi

Leave a Comment