குறும்செய்திகள்

காதல் விவகாரத்தால் வந்த வினை : புலம்பித்தள்ளும் நடிகை..!

Actress Lost film opportunity due to love affair

வீடு தேடி வந்த பட வாய்ப்பு காதல் விவகாரத்தால் பறிபோய் உள்ளது. இதை நினைத்து பட வாய்ப்பே இல்லாத பால் நடிகை சிரிப்பதா? அழுவதா? என தெரியாமல்  புலம்பி வருகிறார்.

பால் நிற நடிகை அறிமுகமானதே விவகாரமான கதையில் தான். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் அந்த பெயரை எடுத்து விட்டார். பெயரை எடுத்த நடிகை அடுத்ததாக ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடித்தார். அந்த படம் வெற்றி பெற்ற பால் நிற நடிகைக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.

இதையடுத்து, குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். முதல் படத்தில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். இதையடுத்து, காதலில் விழுந்த பால் நிற நடிகை நடிப்புக்கு குட்பாஃய் சொல்லிவிட்டு திருமணமாகி செட்டிலானார்.

திருமண வாழ்க்கை பாதியில் கசந்து போனதால் மீண்டும், சினிமாவில் நடிக்க வந்து ஒரு சில பாடங்களில் நடித்தார். வந்ததுமே விவகாரமான கதையில் ஏடா கூடமாக நடித்து மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

இதனாலேயே, பட வாய்ப்பு இல்லாமல் ஆண் நண்பர்களும் அவுட்டிங், நைட் பார்ட்டி என பொழுதை கழித்து கொஞ்சநஞ்சம் இருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

பட வாய்ப்புக்காக எவ்வளவோ தேடி அலைந்தும் படவாய்ப்பு இல்லாததால், என்ன செய்வது என்று திகைத்து நின்ற பால் நடிகை, ”தானே படம் தயாரிக்கிறேன்” என்று ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற மக்களிடையே இவருக்கு பெயர் பெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் ஒருவர் பால் நிற நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய வந்துள்ளார். அந்த நேரத்தில் பால் நிற நடிகையின் காதல் விவகாரம் வெளியே வந்து பிரச்சனை நீதிமன்றம் வரை போக, பயந்து போன தயாரிப்பாளர் ஆளைவிடுடா சாமி என கம்பியை நீட்டி உள்ளார்.

காதல் விவகாரத்தால் பட வாய்ப்பு பறிபோனதை நினைத்து அந்த நடிகை புலம்பி வருகிறார்.

Actress Lost film opportunity due to love affair

Related posts

கொரோனா 2 ஆம் அலை : இந்தியா முழுவதும் 719 டாக்டர்கள் பலி..!

Tharshi

பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்..!

Tharshi

நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கிய வாரிசு நடிகை..!

Tharshi

3 comments

Leave a Comment