குறும்செய்திகள்

30-12-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

டிசம்பர் 30,2022.
சுபகிருது வருடம், மார்கழி 15, வெள்ளிக்கிழமை, 30.12.2022,
வளர்பிறை அஷ்டமி திதி நள்ளிரவு 12:28 மணி வரை,
அதன்பின் நவமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 5:25 மணி வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி.
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி.
எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி.
நல்ல நேரம்: காலை 7:31 – 9:00 மணி.
குளிகை : காலை 7:31 – 9:00 மணி
சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : அம்மன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரவு செலவில் கவனம் தேவை.
பரணி : குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
கார்த்திகை 1 : பொருளாதார நெருக்கடி ஏற்படும். திட்டமிட்ட செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : உங்களுடைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி : வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் கணிசமான லாபம் காண்பீர்.
மிருகசீரிடம் 1, 2 : நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும்.
திருவாதிரை : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு வழியில் நன்மை உண்டாகும் நாள்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்து வந்த தடையை சரி செய்வீர்கள். பொறுப்புக்கள் கூடும் நாள்.

கடகம்:

புனர்பூசம் 4 : குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
பூசம் : தடைபட்ட வேலையை மீண்டும் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும் நாள்.
ஆயில்யம் : வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். தொல்லை கொடுத்தவரின் சதிகளை முறியடிப்பீர்கள்..

சிம்மம் :

மகம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.
பூரம் : சந்திராஷ்டமம் என்பதால் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். முயற்சிகள் தாமதமாகும்.
உத்திரம் 1 : வேலை பளு அதிகரிக்கும். மற்றவர்களின் செயலால் சங்கடம் ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4: புதிய முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
அஸ்தம் : வர வேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் செயல் ஒன்று நிறைவேறும்.
சித்திரை 1, 2 : உங்கள் திறமை வெளிப்படும் நாள் குடும்பத்திலும், வெளியிடத்திலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3, 4 : எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சுவாதி : சிந்தித்து செயல்படுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.
விசாகம் 1, 2, 3 : பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4 : மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை.
அனுஷம் : தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்.

தனுசு:

மூலம் : உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்திற்காக நேரத்தை செலவுசெய்வீர்கள்.
பூராடம் : நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.
உத்திராடம் 1 : திட்டமிட்ட செயல்களில் லாபம் காண்பீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள். நேற்றைய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
திருவோணம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
அவிட்டம் 1, 2 : புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் நாள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : தடைபட்டிருந்த வருமானம் வந்து சேரும். குடும்பத்திற்கு நண்பர்கள் அறிமுகமாவர்.
சதயம் : சுறு சுறுப்புடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.
பூரட்டாதி 1, 2, 3 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4 : மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : மனதில் குழப்ப நிலை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
ரேவதி : குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி இழுபறியில் முடியும். பொறுப்புணர்வு தேவை.

Related posts

வேலை தேடு அல்லது வெளியே போ என கூறிய தந்தை : ஆத்திரத்தில் குடும்பத்தினரை காலி செய்த மகன்..!

Tharshi

டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அக்டோபர் 17 இல் அமீரகத்தில் ஆரம்பம்..!

Tharshi

29-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment