குறும்செய்திகள்

01-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 01,2023
சுபகிருது வருடம், மார்கழி 17, ஞாயிற்றுக்கிழமை, 1.1.2023,
வளர்பிறை தசமி திதி இரவு 11:19 மணி வரை,
அதன்பின் ஏகாதசி திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:12 மணி வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:31 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி.
எமகண்டம் : மதியம் 12:00 – 1:30 மணி
குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
பொது : 2023 வருடப்பிறப்பு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : கோயிலுக்கு செல்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பரணி : உங்கள் விருப்பம் நிறைவேறும். பெரியவர்கள் ஆதரவால் தேவையான பணம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : பொருளாதார நிலை உயரும். நண்பர்களால் புதிய முயற்சிக்கு திட்டமிடுவீர்.
ரோகிணி : செலவு அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி வெற்றியாகும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் ஒருவரின் விருப்பங்களை இன்று நிறைவேற்றுவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நேற்றைய எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்களை விட்டு விலகிச் சென்ற ஒருவர் மீண்டும் உங்களைத் தேடி வருவார்.

கடகம்:

புனர்பூசம் 4 : வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூசம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம் : உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையில் நண்பர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள்.

சிம்மம் :

மகம் : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
பூரம் : தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
உத்திரம் 1 : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : சந்திராஷ்டமம் உள்ளதால் செயல்களில் நெருக்கடி தோன்றும். அமைதி காப்பது நல்லது.
அஸ்தம்: உங்கள் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சித்திரை 1, 2 : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம்:

சித்திரை 3, 4 : ஏழாமிட சந்திரனால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். மகிழ்ச்சி கூடும்.
விசாகம் 1, 2, 3 : இதுவரை இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4 : தடையை விலக்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும் நாள்.
அனுஷம் : நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். புதிய முயற்சியில் முன்னேற்றம் உண்டு.
கேட்டை : மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு:

மூலம் : குடும்பத்தில் உள்ள ஒருவரின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
பூராடம் : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும்.
உத்திராடம் 1 : மனதில் இருந்து வந்த சங்கடம் விலகும். தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : பயணத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் லாபம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : எதிர்பார்த்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கனவு நிறைவேறும்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்து வந்த பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
சதயம் : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
பூரட்டாதி 1, 2, 3 : சகோதரர் உதவியால் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவுகள் அதிகரிக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4 : எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரேவதி: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

Related posts

லட்சத்தில் இருந்து கோடிக்கு மாறிய பிரபல நடிகை..!

Tharshi

22-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

வல்லாரை கீரை பொரியல் எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

3 comments

Leave a Comment