குறும்செய்திகள்

11-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

11th June Today Raasi Palankal

இன்று ஜூன் 11.2021

பிலவ வருடம், வைகாசி 28, வெள்ளிக்கிழமை, 11.6.2021
வளர்பிறை, பிரதமை திதி மாலை 6:27 வரை,
அதன்பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 2:46 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : மகாலட்சுமி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பேச்சில் கோபம் தெரியாத அளவு பக்குவம் இருக்கும்.
பரணி: எதிர்பார்த்த பணம் வரும். உங்களின் செல்வாக்குக் கூடும்.
கார்த்திகை 1: முன்பிருந்த வீண் அலைச்சல் குறையும். வாய்ப்புகள் கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள்.
ரோகிணி: முன்பிருந்த கோபம் மாறி உடன்பிறந்தோர் உதவி செய்வர்.
மிருகசீரிடம் 1,2: பொருளாதார சிக்கல்களை கவனமாகச் சமாளிப்பீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: அவசரமாக செயல்படத் தோன்றும். ஆனால் பதற மாட்டீர்கள்.
திருவாதிரை: நிதானமான போக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் என்று உணர்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட்டுப் பாராட்டு வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: காலையிலேயே மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கக்கூடும்.
பூசம்: அனைத்து செயல்களிலும் ஓரளவுக்கு வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வம்பிலிருந்து மீள்வீர்கள்.

சிம்மம் :

மகம்: இன்று உங்களுக்கு சுபதினம்தான். பகை மாறும். நிம்மதி கூடும்.
பூரம்: தந்தை வழி செத்து வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும்.
உத்திரம் 1: தொடர்புகள் விரிவடையும். தேவைகள் நிறைவேறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வாழ்க்கைத் துணை மூலம் பெற்றோருக்கு ஆதாயம் உண்டு.
அஸ்தம்: நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைத்து நிம்மதி பிறக்கும்.
சித்திரை 1,2: ஓரளவு நன்மைகள் நடக்கும். டென்ஷன்கள் குறையும்.

துலாம்:

சித்திரை 3,4: சில ஆச்சர்யங்கள் உங்களைத் தேடி வரும். பழைய கடன் தீரும்.
சுவாதி: முந்தைய கடமை ஒன்றை நன்கு முடித்து நிம்மதி காண்பீர்கள்.
விசாகம் 1,2,3: சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: தேவையற்ற கற்பனையால் தடுமாற்றம் அடையாதீர்கள்.
அனுஷம்: இன்றைக்கு அனைத்திலும் கவனமாக இருந்தால் மட்டுமே வெல்வீர்கள்.
கேட்டை: பிரச்சினைகளில் திசைத் திருப்பம் ஏற்படுவதால் தப்பித்தீர்கள்.

தனுசு:

மூலம்: கவனக்குறைவால் முன்பு ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் தீரும்.
பூராடம்: குழந்தைகள் உங்களின் மனம் குளிரும்படி நடப்பார்கள்.
உத்திராடம் 1: வாக்குவாதங்களில் வெற்றி பெறுவது சிரமம் என்பது நினைவிருக்கட்டும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: மனதுக்கு நெருக்கமானவரின் ஆதரவு உற்சாகம் தரும்.
திருவோணம்: தாய் வழி உறவினருடன் இருந்த நெருக்கமும் அன்பும் கூடுதலாகும்.
அவிட்டம் 1,2: பெரிய அளவில் இல்லாவிடிலும் சிறு சாதக அலை இருக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: புதிய வேலைக்காச் செய்த முயற்சிகள் தாமதப்படும்.
சதயம்: மனதுக்குப் பிடித்தவர்கள் ஓரளவுதான் உதவியாக இருப்பர்.
பூரட்டாதி 1,2,3: உங்களின் துணிச்சலான வெற்றிக்காகப் போற்றப்படுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: ஆதாயம் உண்டு. புகழ்மிக்கவர்களைச் சந்திக்க நினைத்துத் தடை ஏற்படும்.
உத்திரட்டாதி: உங்கள் திட்டங்களை சேதாரம் இன்றி நிறைவேறப் பாடுபடுவீர்கள்.
ரேவதி: நிதானப்போக்கு காரணமாக வரவிருந்த சிக்கல் நீங்கும்.

11th June Today Raasi Palankal

Related posts

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Hot Butter Mushroom in Sri Lankan Style..!

Tharshi

விரைவில் வெளிவரவுள்ள சாடிலைட் மெசேஜிங் வசதி கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன்..!

Tharshi

Leave a Comment