குறும்செய்திகள்

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி..!

உத்திராடம்:

சனி பகவான் உங்களின் மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தந்தையாரின் குணாதிசயங்கள் அதிகம் நிறைந்திருக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் விருதுகள் பெறுவார்கள். பாராட்டுகளும் கிடைக்கும் சூழல் இருப்பதால் நேர்மையுடன் செயல்படுவது அவசியம்.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சிவபுராணம் சொல்லி சிவபெருமானை வழிபட்டு வாருங்கள். உடல் நலம் சீராகும். இந்த சனிப்பெயர்ச்சியால் அரசாங்க அனுகூலம் கிடைக்கும்

71% நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

திருவோணம்:

சனி பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி – சந்திரன் கூட்டணியில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

கலைத்துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது அவசியம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும்.

பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

மாணவர்கள் எவ்வளவு திறமையாகப் படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வழிபாடு செய்வதால் மனக்குழப்பம் அகலும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். இந்த சனிப்பெயர்ச்சியில், சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

72% நற்பலன்கள் கிடைக்கும்.

அவிட்டம்:

சனி பகவான் உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எடுத்த வேலையைக் கச்சிதமாக செய்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு கூடும். ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியைத் தரும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அடுத்த நிலைக்குச் செல்லும் வழி பிறக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களைப் படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நவக்கிரகங்களை வணங்கி வருவது நன்மையைத் தரும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். இந்த சனிப்பெயர்ச்சியால், சொத்துகள் சேரும்.

65% நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சதயம்:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி – ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. நிதானமாகக் கையாள்வதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வாராஹி தேவியை வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். இந்த சனிப்பெயர்ச்சியால் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்

68% நற்பலன்கள் கிடைக்கும்.

ரேவதி:

சனி பகவான் உங்களின் இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு, புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவர்களுக்கு பயனுள்ளவராக வாழ்வீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.

குடும்பத்திற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலனில் கவனம் தேவை.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நிதானமாகவும் சரியாகவும் தேர்ந்தெடுத்துச் செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாகப் படிப்பது நல்லது.

பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலாண்டவரை நினைத்து,தினமும் வணங்கி வாருங்கள். மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன்கள் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால், தன சேர்க்கை ஏற்படும்.

72% நற்பலன்கள் கிடைக்கும்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Tharshi

23-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மாகாண சபைத் தேர்தல் விரைவில்..!

Tharshi

Leave a Comment