குறும்செய்திகள்

புது வருடத்தில் பெண்கள் எடுக்க வேண்டிய நிதி சார்ந்த நடவடிக்கைகள்..!

புது ஆண்டில் நிதி சார்ந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களை பெருக்கி, தடைகளை ஆராய்ந்து நீக்குபவர்களிடம்தான் செல்வம் பெருகும். அந்த வகையில் உங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

*காப்பீடு திட்டங்களில், குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் உங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்த முடிவு. எதிர்பாராத நேரத்தில் உண்டாகும் சில மருத்துவச் செலவுகளை கையாள்வதற்கு இது உதவி செய்யும். மருத்துவ காப்பீடு திட்டத்தை எடுப்பதற்கு முன்பு அதன் நிறை-குறைகளை ஆராய்ந்து பார்த்துவிட வேண்டும்.

*முதலில் உங்கள் ஒரு நாள் சராசரி செலவை திட்டமிடுங்கள். சில நாட்கள் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக அல்லது குறைவாக செலவு செய்ய நேரிடலாம். இருப்பினும் உங்கள் ஒரு நாளுக்கான வரவு-செலவு எவ்வளவு என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் கண்ணுக்குத் தெரியாமல் செய்யும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.

*அலைபேசி, இருசக்கர வாகனம் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமாக உள்ள எந்தப் பொருளிலும் பணத்தை வீணாக்குவது, நிதி அபாயங்களில் உங்களை சிக்க வைக்கலாம்.

*சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்க ஆர்வம் கொள்வது நல்லது. வாங்கும் போது சற்று அதிகம் செலவழிக்க நேர்ந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

*’பட்ஜெட்’ என்ற ஒன்றை பெயர் அளவில் வைத்துக் கொண்டு, தங்களின் விருப்பப்படி செலவு செய்பவர்கள் அதிகம். நீங்கள் திட்டமிடும் ‘பட்ஜெட்’, நடைமுறையில் கடைப்பிடிக்க சாத்தியமாக இருக்க வேண்டியது அவசியம்.

*உங்கள் செலவுகள் போக மீதம் இருக்கும் வருமானத்தை ஆக்கப்பூர்வமாக கையாள வேண்டும். வங்கி சேமிப்பு, முதலீடு, பகுதி நேர தொழில் செய்வது போன்றவற்றுக்கு அந்தப் பணத்தை பயன்படுத்தலாம்.

*மாதத் தவணைகள், கடனுக்காக செலுத்தப்படும் வட்டிகள் ஆகியவற்றை கவனமாகக் கையாள வேண்டும். முடிந்தவரை வட்டியை குறைக்க வேண்டும் அல்லது கடனை முழுவதாக அடைக்க வேண்டும். இல்லையெனில், ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றும் கதை போல் வருமானம் வீணாகும்.

*’நேரம்’ என்பதை பணத்தின் இன்னொரு பரிமாணமாக பார்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயற்சிப்பவர்கள் நேரத்தை சேமித்து வையுங்கள். இழந்த பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை திரும்ப பெற முடியாது. எனவே புது ஆண்டில் நேர மேலாண்மையை கட்டாயம் பின்பற்றுங்கள். இதனால் ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்ய முடியும்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா..!

Tharshi

விற்பனையை ஊக்குவிக்க எல்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆப்பிள்..!

Tharshi

04-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment