குறும்செய்திகள்

தேர்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிரூபம் வாபஸ் பெறப்பட்டது..!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதனையும் மறுஅறிவித்தல் வரையில் பெற வேண்டாம் என மாவட்ட செயலாளர்களை அறிவுறுத்தி சுற்றுநிரூபம் ஒன்று வெளியாக்கப்பட்டது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனை அடுத்து அந்த சுற்றுநிரூபம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, அதனை வெளியிட்ட நீல் பண்டார, தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையிலேயே அவர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts

சிறுவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் வழிமுறைகள்..!

Tharshi

நாட்டில் 932 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

நடிகையின் காலில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா..!

Tharshi

Leave a Comment