குறும்செய்திகள்

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானி ஒருவர் மர்ம முறையில் மரணம்..!

Mysterious death of nuclear scientist in China

சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்ம முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்..,

சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில்..,

“ஹார்பின் பல்கலை கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான் கடந்த 17 ஆம் திகதி காலை 9.34 மணியளவில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதற்காக அவரது குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜாங்கின் மரணம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பல்கலை கழகத்தின் வலைதள பக்கத்தில் நேற்று வரை ஜாங்கின் பெயர் தலைமைத்துவ பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

மேலும், ஜாங் அந்த பல்கலை கழகத்தின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகவும் மற்றும் சீன அணு கழகத்தின் துணை தலைவர் ஆகவும் இருந்து வந்துள்ளார்.

இதுதவிர, பல்கலை கழகத்தின் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைக்குழு உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

Mysterious death of nuclear scientist in China

Related posts

சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் எவையெனத் தெரியுமா..!

Tharshi

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள்..!

Tharshi

அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ஷ..!

Tharshi

Leave a Comment