குறும்செய்திகள்

பெரு நாட்டில் பேருந்து விபத்து : 27 பேர் பரிதாப பலி..!

27 killed in Peru bus crash

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்..,

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் அயாகுசோ நகரில் இருந்து ஆரிகுப்பா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதிகாலை 3 மணியளவில் அந்த பேருந்து பெருவியன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது திடீரென 250 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

அந்த பேருந்தில் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் அவர்கள் நாஸ்கா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி உடனடி விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதுபற்றி பெருவியன் நகர பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

27 killed in Peru bus crash

Related posts

அனபெல் சேதுபதி : திரை விமர்சனம்..!

Tharshi

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்பட்ட முதல் மரணம்..!

Tharshi

சிம்புவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

Leave a Comment