குறும்செய்திகள்

வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி..!

How to do pedicure at home

வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும். நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும்.

சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பால் 4 கப் பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம்.

பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத் தன்மையும் அதிகரிக்கும்.

How to do pedicure at home

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்த ஒப்பந்தம் வெற்றி : நீடிக்கும் பதற்றம்..!

Tharshi

StreetScore scores a street view based on how safe it looks to a human

Tharshi

கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சாலட் செய்முறை..!

Tharshi

3 comments

Leave a Comment