குறும்செய்திகள்

சீரற்ற காலநிலையால் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி – 15 வயது சிறுவனை காணவில்லை..!

16 year old girl killed by inclement weather in Srilanka

கடந்த இரு தினங்களாக நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட இவர் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

கடும் மழை , வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேச செயலகங்களிலுள்ள 1119 குடும்பங்களைச் சேர்ந்த 5067 நபர்கள் 27 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக 200 குடும்பங்களைச் சேர்ந்த 792 நபர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று மாலை வரை 31 303 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 672 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 5 வீடுகள் முழுமையாகவும் 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இன்றையதினம் 3 மண் சரிவுகள் பதிவாகின.

இதன் போது அயாகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரிஎல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயதுடைய செத்மினி லக்மாலி பெரேரா என்ற பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த வீட்டிலிருந்த 50 வயதுடைய பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று எஹெலியகொட பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலவ்வ கிராம உத்தியோகத்தர் பிரிவில் கெஹெத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் மஹவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் , சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 year old girl killed by inclement weather in Srilanka

Related posts

விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா..!

Tharshi

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Tharshi

ஒரு வாரத்திற்கு சில முக்கிய தனியார் வங்கிகள் சேவை இடைநிறுத்தம்..!

Tharshi

Leave a Comment