குறும்செய்திகள்

சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க சில டிப்ஸ்..!

How to feed children who are not eating

வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன.

ஆனால், அவற்றை சரி செய்ய சில வழிகள் உள்ளன. அவை எவையெனப் பார்ப்போம்.

* எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

* குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.

* குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.

* குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்

* உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.

* உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.

* எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும்.

கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.

How to feed children who are not eating

Related posts

எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ரூ.16 லட்சம் கொள்ளை : முக்கிய குற்றவாளி கைது..!

Tharshi

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!

Tharshi

இந்து பெண்ணின் தலையை வெட்டி தோலை உரித்த கொடுமை..!

Tharshi

Leave a Comment