குறும்செய்திகள்

யூடியூப் கிரியேட்டர்களுக்காக சமீபத்தில் வெளியான புதிய அப்டேட்..!

Recently released new update for YouTube creators

யூடியூப் நிறுவனமானது, தனது யூடியூப் கிரியேட்டர்களுக்காக சமீபத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அது யூடியூப் கிரியேட்டர்களின் கூகுள் கணக்கை பாதிக்காமல் சேனலின் பெயர் மற்றும் ப்ரொபைல்களில் மாற்றம் செய்வதற்கான அனுமதியை தற்பொழுது நிறுவனம் வழங்கியுள்ளது.

அத்துடன், யூடியூப் கிரியேட்டர்ஸ்கள் அளித்த கோரிக்கையின் பெயரில் இந்த புதிய அப்டேட் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

யூடியூப் கிரியேட்டர்கள் அவர்களின் யூடியூப் சேனல்களின் பெயரை மாற்றம் செய்யும் போது, அது பிற கூகுள் சேவைகளான ஜிமெயில் போன்றவற்றில் பிரதிபலிக்கும் வகையில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது வெரிஃபிகேஷன் பேட்ஜ் (verification badge) கொண்ட கிரியேட்டர்களுக்கு இது ஒரு பெரிய குறைபாடாக இருந்தது. காரணம், வெரிஃபிகேஷன் பேட்ஜ் கொண்ட கிரியேட்டர்கள் மாற்றங்களை மேற்கொள்ளும் போது, அது அவர்களின் செக் மார்க்கை இழக்கச் செய்கிறது.

இந்த சிக்கல்களைச் சரியாய் கையாள யூடியூப் நிறுவனம் இந்த புதிய அப்டேட்டை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. சேனல் பெயருக்குப் பதிலாக தங்களது உண்மையான பெயரில் மின்னஞ்சல்களை அனுப்ப விரும்பும் கிரியேட்டர்ஸ்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சரி, இப்போது எப்படி இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி யூடியூப் சேனல் பெயரை மாற்றுவது என்று பார்க்கலாம்.

முதலில் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் YouTube ஆப்ஸை ஓபன் செய்து, உங்கள் யூடியூப் அக்கவுண்ட்டை லாகின் செய்ய வேண்டும். உங்களுடைய யூடியூப் சேனல் பக்கத்திற்குச் செல்லவும், பின்னர் Edit channel ஆப்ஷன் பகுதிக்குச் செல்லவும். இங்கு உங்கள் சேனலுக்கான பெயரை மாற்றம் செய்து OK என்பதை கிளிக் செய்து சேவ் செய்யுங்கள். யூடியூப் சேனல் ப்ரொபைல் படத்தை மாற்றம் செய்ய, உங்கள் சேனலில் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து புதிய புகைப்படத்தைத் தேர்வு செய்து, சேவ் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

கணினி மூலமாக எப்படி யூடியூப் சேனல் பெயரை மாற்றம் செய்வது..?

உங்கள் கணினியில் யூடியூப் வலைத்தளத்தை ஓபன் செய்து, உங்களின் யூடியூப் அக்கவுண்ட்டை லாகின் செய்யவும். உங்களுடைய யூடியூப் சேனல் பக்கத்திற்கு செல்லவும். இடது பக்கம் இருக்கும் மெனு ஆப்ஷனில் இருந்து Customisation என்ற விருப்பத்தை கிளிக் செய்து, Basic Info என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

ப்ரொபைல் படத்தை எப்படி மாற்றுவது..?

பின்னர், Edit என்ற விருப்பத்தை கிளிக் செய்து, யூடியூப் சேனல் பெயரை மாற்றம் செய்து, Publish என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுடைய ப்ரொபைல் படத்தை மாற்றம் செய்ய, மேல் இடது மெனுவில் அமைக்கப்பட்டுள்ள Customisation விருப்பத்தை கிளிக் செய்து Branding > Upload and add a new image என்று புதிய படத்தை மாற்றிக் கொள்ளலாம்.

Recently released new update for YouTube creators

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 3 பேர் பலி..!

Tharshi

இலங்கை கடன் நிலையான தன்மையை அடைவது முக்கியம் : சீன மக்கள் வங்கி (PBoC) ஆளுநர் யி கேங்..!

Tharshi

நாட்டில் இன்று 3,414 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment