குறும்செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 30 ஆம் திகதிக்கு பின் நீடிக்கும் சாத்தியம் கிடையாது..!

The Isolation Curfew Act is unlikely to last beyond the 30th

“தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 30 ஆம் திகதிக்கு பின் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து” என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்..,The Isolation Curfew Act is unlikely to last beyond the 30th

நாட்டை முடக்கி, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதனை, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டது.

நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளன.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளைய தினம் (27) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால், கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நாளைய தினம் கூடி, இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The Isolation Curfew Act is unlikely to last beyond the 30th

Related posts

WhatsApp’s Android app gets a Material Design makeover

Tharshi

அனபெல் சேதுபதி : திரை விமர்சனம்..!

Tharshi

அஸ்ட்ரா ஜெனேகா – ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி..!

Tharshi

Leave a Comment