குறும்செய்திகள்

15-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

15th September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 15.2021

பிலவ வருடம், ஆவணி 30, புதன்கிழமை,
வளர்பிறை, நவமி திதி மதியம் 1:04 வரை,
அதன்பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:22 வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : விஷ்ணு வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.
பரணி: சிறு நன்மைகளும் சில மனஅழுத்தங்களும் உள்ள நாள்.
கார்த்திகை 1: பொறுமை காரணமாகப் பிரச்னைகளை ஊதித்தள்ளுவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சிகரமான செய்தி வரும்.
ரோகிணி: உறவினரின் உதவி கிடைப்பது பற்றி சந்தேகமே. பேச்சால் சிரமம் வரலாம்.
மிருகசீரிடம் 1,2: வாழ்வில் முன்னேற சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: தைரியம் கூடும் நாள். நல்லவர்களுக்கு நெருக்கமாவீர்கள்.
திருவாதிரை: பயணங்களால் நன்மை கிட்டும். வருமானம் பெருகும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் போட்டிகள் விலகி லாபம் பார்ப்பீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: பொருட்களின் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
பூசம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்
ஆயில்யம்: நீண்ட நாட்களாக இருந்த தடை விலகி வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணி முயற்சிகள் கைகூடும்.
பூரம்: தொழிலில் லாபம் கிட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரம் 1: திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருந்த நிலை மாறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்க வேண்டி வரும்.
அஸ்தம்: நிம்மதி வரும். அதிகாரிகள் காட்டி வந்த கசப்புகள் நீங்கும்.
சித்திரை 1,2: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனபலம் அதிகரிக்கும்.
சுவாதி: பெண்களுக்கு சுபநிகழ்ச்சிகள் பற்றிய விருப்பங்கள் கைகூடும்.
விசாகம் 1,2,3: கவலை தீரும். கலைஞர்கள் முயற்சியைக் கூட்டுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நிம்மதி நிறையும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வீர்கள்.
அனுஷம்: பணியாளர்கள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கேட்டை: உங்கள் செயல்திறன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பிறர் திணறுவர்.

தனுசு:

மூலம்: பணவரவு உண்டு. வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.
பூராடம்: இளைஞர்கள் போராடி வெல்வீர்கள். பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் 1: முயற்சிகளில் தடை ஏற்படக்கூடும். தம்பதிகளின் நெருக்கம் கூடும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
திருவோணம்: எதிர்பார்த்தது நடைபெறாமல் பதற்றம் ஏற்படலாம். பொறுமை தேவை.
அவிட்டம் 1,2: அதிகாரியின் கட்டளையை விருப்பமின்றி நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: இளைஞர்கள் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சதயம்: நல்லவர் ஒருவர் அறிமுகமாகி உங்களுக்கு நன்மை செய்வார்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உங்களை கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுப்பார்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினர் உதவுவர்.
ரேவதி: உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகன வசதி பெருகும்.

15th September Today Raasi Palankal

Related posts

துமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை..!

Tharshi

இலங்கை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவுக்கு..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment