குறும்செய்திகள்

ஐ.பி.எல் 2022 : சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு..!

First Retention Card At IPL Auction Will Be Used For MS Dhoni

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இத்தகவல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெறும்.

இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம். சி.எஸ்.கே.வில் தக்கவைக்கப்பட்டதன் மூலம் டோனி அடுத்த ஆண்டும் அந்த அணியில் விளையாடுவார்.

அத்துடன் அவர், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

First Retention Card At IPL Auction Will Be Used For MS Dhoni

Related posts

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் குமார் சங்கக்கார..!

Tharshi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

வெலிக்கடை சிறைக் கூரையில் இன்றும் தொடரும் போராட்டம்..!

Tharshi

Leave a Comment