குறும்செய்திகள்

லிஃப்ட் விபத்தில் 30 வயது நபர் உயிரிழப்பு..!

30 year old dies in elevator crash

மில்லனிய, பரகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் லிஃப்ட் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உற்பத்தி இயந்திரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லிஃப்டில் தலை சிக்கியதால் அந்த நபர் இறந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் மொரந்துடுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என மில்லனியா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் மேலும் 09 சக ஊழியர்களுடன் இணைந்து உற்பத்தி இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மில்லினிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 year old dies in elevator crash

Related posts

We Found the Sexiest Lingerie on the Internet

Tharshi

மீண்டும் தமிழ் நடிகருடன் இணைய மறுக்கும் ப்ரேமம் நடிகை..!

Tharshi

Wind and solar power are even more expensive than is commonly thought

Tharshi

Leave a Comment