குறும்செய்திகள்

இந்தோனேசியாவில் கடும் நில அதிர்வு : இலங்கைக்கு தாக்கமா..!

இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோருக்கு அருகிலுள்ள பண்டா கடலில் 7.6 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது அவுஸ்திரேலியா வரை உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வின் பின்னர் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்தோனேசிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:47 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தின் ஒரு பகுதியான பாபர் தீவிலிருந்து வடக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் அல்லது கிழக்கு திமோருக்கு வடகிழக்கே 368 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டா கடலில் பதிவானது.

இதன் சேதவிபரங்கள் இன்னும் வெளியாகாத அதேநேரம், இந்த நில அதிர்வால் இலங்கைக்கு தாக்கங்கள் எவையும் இல்லை என அனர்த்த முகாமை மையம் அறிவித்துள்ளது.

Related posts

பிரண்ட்ஷிப் : திரை விமர்சனம்..!

Tharshi

உணவில் உப்பு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

Precinct Data Shows Rich, White Neighborhoods Flipping Democratic in 2016. Will It Last?

Tharshi

Leave a Comment