குறும்செய்திகள்

இளம் வயதிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் கிரீன் டீ பேஸ் பேக்..!

சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க சில அழகுக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்க அது உதவுகின்றது.

அந்தவகையில், ஃபேஸ் பேக்குகளில் கிரீன் டீயை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்து பளபளக்கச் செய்கிறது.

கிரீன் டீ சருமத்தில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதனால் எளிதில் அல்லது இளம் வயதில் ஏற்படும் வயதான தோற்றத்தினை தடுக்கிறது.

கிரீன் டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கரு வளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

கிரீன் டீயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைக் குறைத்து வடுக்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடும் போது சருமத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளைச் சரி செய்கிறது.

இரண்டு தேக்கரண்டியளவு அரிசி மாவு, ஒரு தேக்கரண்டியளவு கிரீன் டீ தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து கலவையாக்கிக் கொள்ளுங்கள்.

அதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஆனால் கலவையைக் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி அப்ளை செய்யாதீர்கள்.

இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் அல்லது கலவை காயும் வரை வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாறு சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எலுமிச்சை சாறு முகப்பருவுக்குத் தீர்வளித்து முகத்தில் இருக்கும் வடுக்களைச் சரி செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு எலுமிச்சை சாறு கிடைக்க விட்டால் தேன் பயன்படுத்தலாம்.

அரிசி மாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளது. எண்ணெய் சருமத்திற்கு ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டராக அரிசி மாவு உதவும்.

மேலும் முகத்தில் இருக்கும் டனை அகற்றுவதற்கு அரிசி மாவு சிறந்த தீர்வாகும். அரிசி மாவு வைட்டமின் பி இன் மூலமாக இருப்பதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது.

Related posts

01-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

07-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நேபாளத்தில் நிலச்சரிவு – வெள்ளம் : 16 பேர் உயிரிழப்பு..!

Tharshi

5 comments

Leave a Comment