குறும்செய்திகள்

கோடை காலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்கும் இயற்கை வழி முறைகள்..!

Heat Rash in babies In Summer

கோடை காலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.

* தினமும் குழந்தையை இரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.

* குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.

* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

* குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், அதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.

* சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

* சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வர குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.

* இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். பின் காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

* வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குருவும் சரியாகிவிடும்.

* சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டி விடவும்.

Heat Rash in babies In Summer

Related posts

சீரற்ற காலநிலையால் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி – 15 வயது சிறுவனை காணவில்லை..!

Tharshi

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு..!

Tharshi

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்..!

Tharshi

Leave a Comment