குறும்செய்திகள்

நீங்கியது ஆபத்து : இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகம்..!

Chinese_Rocket_Segment_Disintegrates_Near_Maldives

கடந்த மாதம் 29 ஆம் திகதி அனுப்பப்பட்ட லாங் மார்ச்-5பி ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மாதம் 29 ஆம் திகதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.

அந்நிலையில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ராக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Chinese Rocket Segment Disintegrates Near Maldives

Related posts

24-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது..!

Tharshi

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி : மருமகனுக்கு சீர் செய்த மாமனார்..!

Tharshi

2 comments

Leave a Comment