குறும்செய்திகள்

எந்த மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடினேனோ அதே இடத்தில் காரித்துப்பிட்டாங்க : எமோஷனலாக பேசிய ஜூலி..!

Julie gets emotional on Bigg Boss Jodigal Show

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், “பிக் பாஸ் ஜோடிகள்” நிகழ்ச்சியில் “பிக் பாஸ் ஜூலி” எமோஷனலாக பேசியுள்ளமை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

செவிலியரான ஜூலி மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து, பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார் ஜூலி.

சினிமா மற்றும் மீடியாவை சேராத நபராக முதல் பிக் பாஸ் சீசனிலேயே ஜூலி பங்கேற்று கலக்கினார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஜூலி செய்வதையும் பேசுவதையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஜூலியின் இமேஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக டோட்டலாக டேமேஜ் ஆனதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவே ஜூலி மாறிவிட்டார். “அம்மன் தாயி”, “அனிதா” என சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கூடவே சர்ச்சைகளும் கிளம்பின. பெரிய அளவில் ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமாக போட்டோஷூட்களை நடத்தி தனக்கான ரசிகர்கள் வட்டத்தை பெருக்கி வருகிறார் நடிகை ஜூலி. மேலாடை அணியாமல், கருப்பு பெயின்ட் ஊற்றியபடி பிளாக் லிவ்ஸ் மேட்டருக்காக இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

பிக் பாஸ் பிரபலங்களுக்கு மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விதமாக பிக் பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியை விஜய் டிவி உருவாக்கி உள்ளது. ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருக்கும் அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஜூலியும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.

இந்நிலையில், சென்ட்ராயன் உடன் இணைந்து ஆடிய நடிகை ஜூலி, “எந்த மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடினேனோ அதே மெரினாவில் தன்னை காரித்துப்பிட்டாங்க, ஜெயிக்கிற வரைக்கும் விடாமல் போராட வேண்டும்” என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளமை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Julie gets emotional on Bigg Boss Jodigal Show

Related posts

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 க்யூட் போட்டியாளர்களின் பின்னணி..!(2ஆம் இணைப்பு)

Tharshi

ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Tharshi

எல்லாத்தையும் மூட வைச்ச கொரோனாவுக்கு இந்த மனைவிமாரோட வாயை மட்டும் மூட வைக்க முடியல..!

Tharshi

Leave a Comment