குறும்செய்திகள்

குழந்தைகளின் பார்வைத்திறனை பெரிதளவில் பாதிக்கும் ஆன்லைன் பயன்பாடு..!

Online application affect children Eyes

தற்போதைய கொரோனா காலத்தில், ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் “ஸ்கிரீன் டைம்” கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.

அதாவது, பள்ளிக் குழந்தைகளுக்கு வீடுகளிலேயே “ஆன்லைன்” வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் பெரும்பாலான நேரம் அவர்கள் போனையும், லேப்டாப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்கும் நேரத்தை “ஸ்கிரீன் டைம்” என்று குறிப்பிடுகிறோம்.

இப்போது ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் “ஸ்கிரீன் டைம்” கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத் திறனையும், செயல் திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும்.

எப்போதுமே குழந்தைகளை இரண்டு வயது வரை டி.வி, போன், கம்ப்யூட்டர் போன்றவைகளின் ஸ்கிரீன் முன்பு கொண்டு செல்லக்கூடாது. இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தினமும் அரை மணிநேரம் மட்டுமே அத்தகைய ஸ்கிரீன்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். அதைவிட அதிக நேரம் ஸ்கிரீன்களை பார்த்தால் அதனை ஸ்கிரீன் அடிக்ஷன் என்று கூறுவார்கள்.

குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றபடி அவர்களது குணநலன்கள் உருவாகிவிடும். வன்முறை எண்ணமும், ஆத்திரமும் கொண்ட குழந்தைகளாக வளர்ந்து கொண்டிருந்தால், அதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகளை வன்முறை நிறைந்த கார்ட்டூன்களைகூட பார்க்க அனுமதிக்கக்கூடாது.

டி.வி. நிகழ்ச்சிகளை காட்டியபடியே குழந்தைகளுக்கு உணவூட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதுபோல் குழந்தை களின் படுக்கை அறையில் கம்ப்யூட்டர், டி.வி. போன்றவைகளையும் வைத்திருக்கக் கூடாது. வீட்டின் பொது அறைகளில் இருந்து கொண்டிருக்கும் டி.வி., கம்ப்யூட்டர் போன்றவைகளை தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு “ஆப்” செய்து விடுங்கள்.

அத்துடன், படுத்துக்கொண்டு டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே தூங்கிவிட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். அது அவர்களது ஆழ்ந்த தூக்கத்தைகெடுக்கும். அதனை “டிஸ்டர்ப்டு ஸ்லீப்” என்று கூறுவார்கள். அவர்கள் திடீரென்று தூக்கத்தில் விழித்து கத்தலாம், பயங்கொள்ளலாம், அழவும் செய்யலாம்.

குழந்தைகளின் “ஸ்கிரீன் டைம்”மை குறைக்க வழி இருக்கிறது. விளையாட்டு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, விவசாயம், சமையல் போன்று, அவர்களுக்கு பிடித்தமானவைகளில் மனதை திருப்பி விடலாம். பெற்றோர்கள் டி.வி., செல்போன்களின் பயன்பாட்டை குறைத்தால், குழந்தைகளும் தாமாகவே அதில் இருந்து விடுபடும்.

பெற்றோர் அவைகளை அதிக நேரம் பயன்படுத்திக் கொண்டே குழந்தைகளை மட்டும் குறைக்கச் சொல்வது எதிர்பார்க்கும் பலனைத்தராது. குழந்தைகளிடம் ஸ்கிரீன் டைம் அதிகரித்தால் கண்பார்வைக் குறைபாடு மட்டுமின்றி ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.

எல்லா வீடுகளிலும் தினமும் ஒருமுறையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அந்த நேரத்தை ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் ஏதாவது குழப்பங்கள் இருக்கிறதா? பிரச்சினைகள் எதிலாவது அவர்கள் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறியவும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த “பேம்லி டைம்”மில் மனதில் இருப்பதை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஊட்ட வேண்டும்.

குழந்தைகளை தற்போது ஆடவும், பாடவும், சிரிக்கவும் வைத்து போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. அது நல்ல பழக்கம் இல்லை. அத்தகைய காட்சிப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம்.

குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு யதார்த்த உலகத்தை புரிய வையுங்கள். அவர்களுக்கு சமூக வலைத்தள பிரவேசம் இப்போது அவசியம் இல்லை.

Online application affect children Eyes

Related posts

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Tharshi

இந்து பெண்ணின் தலையை வெட்டி தோலை உரித்த கொடுமை..!

Tharshi

Cheryl Steals Kate Middleton’s Beauty Icon Status

Tharshi

Leave a Comment