குறும்செய்திகள்

செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை : கிளம்பிய கடும் எதிர்ப்பு – திரும்ப பெறப்பட்ட உத்தரவு..!

Delhi GB Pant hospital withdraws controversial order

செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்டது.

டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) பணியாற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, மருத்துவமனை நோயாளி ஒருவர் சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிக்கு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலக மொழியாக ஆங்கிலம், இந்தி இருக்கும்போது, சில செவிலியர்கள் மலையாளத்தில் பேசுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் பேச வேண்டும் என்றும் தங்களது தாய்மொழியை பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் எழுதிய இந்த சுற்றறிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், செவிலியர்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இருந்தும் பல செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு, மற்ற மாநிலங்களை சேர்ந்த செவிலியர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

மேலும் காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது என்கிற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

Delhi GB Pant hospital withdraws controversial order

Related posts

அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம்..!

Tharshi

யார் யார் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அதன் பலன்கள் என்ன..!

Tharshi

இந்தியில் இரண்டு பட வாய்ப்புக்களை தூக்கியெறிந்த காதல் நாயகி..!

Tharshi

Leave a Comment