குறும்செய்திகள்

லிங்குசாமியின் படத்தில் வில்லனாகும் மாதவன்..!

Madhavan villain in lingusamy Movie

இயக்குனர் லிங்குசாமி புதிதாக இயக்கவுள்ள தெலுங்கு படத்தில், நடிகர் மாதவனை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

அதாவது தமிழில் “ஆனந்தம்”, “ரன்”, “பையா”, “சண்டக்கோழி” என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது.

இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில் மாதவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் மாதவன், லிங்குசாமி இயக்கத்தில் “ரன்”, “வேட்டை” போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Madhavan villain in lingusamy Movie

Related posts

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

சறுக்கிய சில்வர் ஸ்க்ரீன் என்ட்ரி : மீண்டும் முருங்கை மரம் ஏறிய டிவி நடிகை..!

Tharshi

சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment