குறும்செய்திகள்

இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மினி 6th Gen மாடல்..!

Apple iPad Mini 6th Generation renders

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மினி யுஎஸ்பி டைப் சி, பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மினி 6th Gen மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புது ஐபேட் மினி விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், முதல் முறையாக புது ஐபேட் மினி டிசைன் விவரங்கள் ரென்டர் வடிவில் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னதாக பலமுறை இணையத்தில் வெளியான ரென்டர்களில் அதிக விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதைய ரென்டர்கள் நேரடி புகைப்படங்கள், ஸ்கீமேடிக் மற்றும் சி.ஏ.டி. பைல்களை சார்ந்து உருவாகி இருக்கிறது.

புதிய ரென்டர்களின் படி புதிய தலைமுறை ஐபேட் மினி கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக ரி-டிசைன் செய்யப்பட்டுள்ளது. 6th Gen ஐபேட் மினி தோற்றத்தில் 4th Gen ஐபேட் ஏர், புது ஐபேட் ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் போன்ற பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புது ஐபேட் மினி 8.4 முதல் 8.9 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடலில் ஹோம் பட்டன் இருக்காது என்றும் டச் ஐடி பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

Apple iPad Mini 6th Generation renders

Related posts

நாளை முதல் ரயில் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

Tharshi

06-01-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

நாட்டில் இன்று 3,142 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment